அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சேலத்தில் உள்ள அவரது வீட்டில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் 70 கிலோ கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,அவருக்கு திடீரென நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுக,அதிமுகவை எதிர்த்து கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் எட ப்பாடியிலிருந்தே தனது அரசியலுக்கான பிள்ளையார் சுழியை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது