பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்-பின்னணி பாடகி சைந்தவி இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு, அன்வி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த்திரையுலகில் , இசையமைப்பாளர்,கதாநாயகன் என பயணித்து வரும் ஜி.வி.பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு அன்வி என்கிற பெண் குழந்தையும் பிறந்தது.இந்நிலையில் தற்போது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாகவே பிரிந்து வாழ்ந்து வருவதாகவும்,இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று இரவு 10 மணிக்கு வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன