லைகா நிறுவனம் தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது இந்நிலையில் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் நிறைவடைந்துள்ளது இதையடுத்து இறுதி நாளில் ரஜினிகாந்துக்கு படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து மகிழ்ந்தனர்
இப்படத்தை தொடர்ந்து விரைவில் லோகேஷ் கனகராஜின் கூலி படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.