பனை மரம் வளர்க்கப்பட வேண்டும். பனை தொழிலும்,பனை தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். பனைமரம் பாரத தேசமெங்கும் பரவ வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் பனை
இப்படத்தில் கதையின் நாயகனாக ஹரீஷ் பிரபாகரன், நாயகியாக மேக்னா நடிக்க வடிவுக்கரசி. அனுபமா குமார், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, டி.எஸ்.ஆர், லாலா கடை புகழ் ரிஷா ஜேக்கப் மற்றும் பலர் நடிக்க பனை படம் உருவாகியுள்ளது.இப்படத்தை ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் தயாரிக்க இணைத்தயாரிப்பை ஜெ.பிரபாகரன் கவனிக்கிறார்.இப்படத்தின் கதையை எம் ராஜேந்திரன் எழுத, திரைக்கதை வசனம்எழுதி இயக்கியுள்ளார்-ஆதி.பி.ஆறுமுகம் ஒளிப்பதிவை சிவக்குமார் ரங்கசாமி கவனிக்க, வைரமுத்து பாடல்களுக்கு மீராலால் இசையமைத்துள்ளார்
இப்படத்தில் மூன்று பாடல்கள் வைரமுத்து பாடல் வரிகளில் சிறப்பாக அமைந்துள்ளது
பனமரம் பனைமரம்
பணங்காய்க்கும் பனமரம்
பசிதீர்க்கும் மரமய்யா
பனமரம்
இது நம்ம பண்பாட்டில்
கலந்ததய்யா பனமரம்
நமக்காக நம்மோடு
வாழும்மய்யா பனமரம்
சேரன் ஆண்டகாலம் முதல்
செல்போன்கள் காலம் வரை…
என்று பனைமரத்தின் மகிமையை பற்றி எழுதியிருக்கிறார்
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது