நடிகர் சிவகார்த்திகேயன்-இயக்குனர் சிபி சக்கரவர்த்தி கூட்டணியில் உருவாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ’டான்’ திரைப்படம் வெளியாகி 2 வருடங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், சிவகார்த்திகேயன்-சிபி சக்கரவர்த்தி கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர் இப்படத்தின் ‘ஸ்கிரிப்ட்’ வேலைகள் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடந்து வந்த நிலையில் தற்போது ஸ்கிரிப்ட் அமைக்கும் பணி முடிவடைந்து விட்டதாகவும், இதைதொடர்ந்து வசனம் எழுதும் பணி மற்றும் நட்சத்திரங்கள் தேர்வு செய்யும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கிய ‘அமரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தை தொடர்ந்து, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்.கே 23’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், சிபி சக்கரவர்த்தி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்கிறார்கள்.