தமிழ் திரையுலகில் ’மின்னலே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கவுதம்மேனன் தொடர்ந்து, ’காக்க காக்க’ ’வேட்டையாடு விளையாடு’ ’பச்சைக்கிளி முத்துச்சரம்’ ’வாரணம் ஆயிரம்’ ’விண்ணைத்தாண்டி வருவாயா’ ’என்னை அறிந்தால்’ ’வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட பல படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம்வருகிறார். இயக்கத்துடன் நடிப்பையும் கையில் எடுத்துள்ள கவுதம் மேனன் ’விடுதலை 2’ உட்பட சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
மேலும் விக்ரம் நடிப்பில் கவுதம்மேனன் இயக்கத்தில் உருவாகி சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள ’துருவ நட்சத்திரம்’ விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகயிருக்கும் புதிய படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்க உள்ளதாகவும், இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உளளதாகவும் கூறப்படும் நிலையில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.மம்முட்டியுடன் மலையாளத்தில் நயன்தாரா கடைசியாக ‘புதிய நியமம்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.