இளையராஜா தான் இசையமைத்த பாடல்களுக்கான காப்புரிமை கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், “வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும்போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” எனக் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், சமீபத்தில் ‘படிக்காத பக்கங்கள்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வைரமுத்து, “இசை பெரிதா.. மொழி பெரிதா என்பது இப்பொழுது பெரிய விவாதமாக மாறி உள்ளது. இதில் என்ன சந்தேகம், இசை எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரியது மொழி. மொழி எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது இசை. இதை புரிந்து கொண்டவர்கள் ஞானி, புரிந்துகொள்ளாதவர்கள் அந்நியானி என்று பேசி இருந்தார்”.வைரமுத்துவின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இளையராஜாவின் சகோதரர் கங்கைஅமரன் “இளையராஜா இல்லை என்றால் வைரமுத்து இந்த அளவுக்கு வளர்ந்திருக்க மாட்டார் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், வைரமுத்துவுக்கு நன்றி விசுவாசம் இல்லை என கடுமையாக பேசி இருந்தார். வைரமுத்து நல்ல பாடலாசிரியர் என்பது உண்மைதான் எனக்குறிப்பிட்ட கங்கைஅமரன், தான் கூட அவரது பாடல் வரிகளை ரசித்ததாகவும், ஆனால், வளர்ந்துவிட்ட பின் அவரது பேச்சு சரியில்லை என்றும் குறிப்பிட்டதோடு, வைரமுத்து ஒரு நல்ல மனிதர் கிடையாது என பேசியிருந்தார். மேலும், இனி இளையராஜா குறித்து தவறாக பேசினால் நடப்பதே வேறு என எச்சரித்ததோடு, தனது பேச்சுக்கு வைரமுத்து பதில் அளிக்க கூட தேவையில்லை எனவும் பேசி இருந்தார். இதையடுத்து இந்த விஷயம் தற்போது விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,”பழித்தாரும் வாழ்க, என்னைப் பகைத்தாரும் வாழ்க. மன்றில் இழித்தாரும் வாழ்க, வாழ்வில் இல்லாத பொய்மை கூட்டிச் சுழித்தாரும் வாழ்க. என்னைச் சுற்றிய வெற்றி வாய்ப்பைக் கழித்தாரும் வாழ்க. நானோ காலம்போல் கடந்து செல்வேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்,
காலம்போல் கடந்து செல்வேன் pic.twitter.com/KS4QwBZJgX
— வைரமுத்து (@Vairamuthu) May 15, 2024