தமிழ்த்திரையுலகில் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பின்னர், ராமராஜன்- இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம், ‘சாமானியன்’. ராகேஷ் இயக்கத்தில், ராமராஜனின் 45-வது படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், வெங்கட், மைம் கோபி, கே.எஸ்.ரவிக்குமார், சரவணன், தீபா சங்கர், ஸ்ம்ருதி வெங்கட், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விரைவில் வெளியாகவுள்ள இப்படம் குறித்து நாயகன் ராமராஜன் கூறுகையில்,”தமிழில் இது எனக்கு 45 வது படமாக உருவாகி வருகிறது. இப்படம் என்னுடைய படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு அமைந்துள்ளது. இதில் மனதில் ஒரு அழுத்தத்தை வைத்துக் கொண்டு,சாமானியனாக வலம் வரும் கதாபாத்திரம் என்னுடையது. இதில்,முதல் முறையாக தாடியுடன் நடித்துள்ளேன் அதே மாதிரி இதில் விதவிதமான கலர் சட்டை கிடையாது முக்கியமா இளையராஜா இசை என்றாலும், இதில் எனக்கு பாடல் கிடையாது.
அப்படி என்ன கதையில் நடிச்சீங்க என கேட்டால், படம் பார்க்கும் போது நீங்களே அதை உணர்வீர்கள். அதைவிட எனக்கு ஜோடி கிடையாது ராதாரவி,எம் எஸ். பாஸ்கர் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.அரசியல் அதை தொடர்ந்து எனக்கு ஏற்பட்ட பெரிய விபத்து இந்த பெரிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடிப்புக்கு திரும்பி இருக்கிறேன் இனிமேல் நடிப்பில் முழுக்கவனம் செலுத்த இருக்கிறேன். அரசியல் இப்போது இல்லை . நிறைய இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறேன் இன்றைய காலக்கட்டத்துக்கு தகுந்த கதை மற்றும் எனக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்தெடுத்து அடுத்தடுத்து நடிக்க இருக்கிறேன்.கரகாட்டக்காரன் 2 ம் பாகம் வருமா என கேட்கிறார்கள் , இயக்குனர் கங்கை அமரனே என்னிடம் இது குறித்து கேட்டார் ஆனால் நான்தான் வேண்டாம்னே இன்றைக்கும் பேசப்படும் அந்த படத்தை அப்படியே விட்டு விடுவோம் என கூறிவிட்டேன். நான் பெரிய இயக்குனர், சிறிய இயக்குனர் என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. நல்ல கதை மற்றும் திறமையானவர்களுக்கு முதலிடம் தருவேன். சாமானியன் பட வெளியீட்டுக்கு பின்னர் எனது புதிய பட அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்கிறார்.
சாமானியன் படத்தைத் தொடர்ந்து ராமராஜன் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் படத்தை ‘சாமானியன்’ படத்தின் கதாசிரியரான கார்த்திக் குமார் இயக்குகிறார். படத்தின் இளையராஜா இசையமைக்கிறார்.