இசை பெரிதா பாடல் பெரிதா? என்ற பஞ்சாயத்து கோலிவுட்டில் அளவில் போய் கொண்டிருக்க , அட,போங்கய்யா அதைவிட எனக்கு வேற வேலை கெடக்கு என்றவாறு இசைஞானி, இன்று காலை தான் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார். பலரும் வரும் ஜூலை மாதத்தில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக விழா நடந்து முடிந்துள்ள சூழலில் இது குறித்து இளையராஜா அறிவிப்பாரா, இல்ல அவருக்கு பதிலடியா ஏதாவது சொல்லுவாரோ,என்றெல்லாம் ஒரு கூட்டம் கூட்டிக் கழித்து பார்த்து கொண்டிருக்க இளையராஜாஇன்று மாலை 6:00 மணியளவில் அதற்கான விடையை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “வணக்கம். என்னைப் பற்றி ஏதோ ஒரு வகையில் தினமும் வீடியோக்கள் வெளியாகின்றன என்ற செய்தியை வேண்டியவர்கள் மூலமாக கேள்விப்படுகிறேன். நான் இதில் கவனம் செலுத்துவதில்லை. காரணம், மற்றவர்களை கவனிப்பது என் வேலையில்லை. என் வேலையை கவனிப்பது என் வேலை. என் வழியில் சுத்தமாக சென்று கொண்டிருக்கிறேன்.
நீங்கள் என்னை வாழ்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்ஃபோனியை எழுதி முடித்துவிட்டேன். இங்கே பட இசையில் கவனம் செலுத்திக்கொண்டும், இடையில் விழாக்களுக்கு சென்றுகொண்டிருந்தபோதிலும், ஒரு சிம்ஃபோனியை 35 நாட்களில் முழுவதுமாக எழுதி முடித்துவிட்டேன் என்ற எனக்கு சந்தோஷமான செய்தியை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். பியூர் சிம்ஃபோனியாக எழுதி முடித்துவிட்டேன் என்பதை என்னுடைய ரசிகர்களுக்கு உற்சாகமான இந்த செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்” என அதிரடியாக அறிவித்துள்ளார்
— Ilaiyaraaja (@ilaiyaraaja) May 16, 2024