தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்சங்கத் (2015-2017)தேர்தல் இன்று காலை எட்டு மணிக்கு சென்னை அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல் லூரியில் சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே.ராஜன் முன்னிலையில் தொடங்கியது . இதில் சங்கத் தலைவர் பதவிக்கு,பட அதிபர்கள்,கலைப்புலி எஸ்,தாணு,ஏ.எல். அழகப்பன்,மன்சூரலிகான்,ஹென்றி,கெட்டப் ராஜேந்திரன் ஆகிய ஐந்து பேர் போட்டியிட்டனர். காலையில் இருந்தே ஓட்டு ப் பதிவு மள மளவென பதிவாகியது. மாலை ஐந்து மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.இதில் கலைப்புலி எஸ்.தாணு 565 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட வி.பி. கதிரேசன் 488 ஓட்டுகளும்,தேனப்பன் 355 ஓட்டுகளும் பெற்று வெற்றி பெற்றனர்.23 செயற்குழு உறுப்பினர்களுக்கு மொத்தம் 73 பேர் போட்டியுடுகின்றனர் .தற்போது செயற்குழு உறுப்பினர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது இதிலும் கலைப்புலி தாணு அணியினரே முன்னணியில் உள்ளனர்.