நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாக ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வந்த ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக நடித்து வந்த நிலையில், தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பினார்.இதையடுத்து அவர் சில நாட்கள் ஒய்யவுக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்பட்டு வந்த நிலையில்,தற்போது ரஜினிகாந்த் ஓய்வு எடுக்க அபுதாபி சென்றுள்ளதாகவும் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் அபுதாபி செல்லும் விமானத்தில் கிளம்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. அபுதாபியில் ரஜினிகாந்த் ஒரு வாரம் தங்கி இருந்து ஓய்வு எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் அதன் பிறகு அவர் சென்னை திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.