நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து,இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருவதாகவும் குறிப்பாக விஎப்எக்ஸ் பணிகளுக்காக இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில்,’கோட்’ படத்தின் ‘விஎப்எக்ஸ்’ பணிகள் குறித்த புகைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, ’கோட்’ படத்தில் விஜய்க்கான ‘விஎப்எக்ஸ்’ பணிகள் முற்றிலும் முடிந்துள்ளதாகவும், அமெரிக்காவின் தலைசிறந்த லோலா விசுவல் எபெக்ட்ஸ் என்ற நிறுவனத்தில் தான் இந்த பணிகள் நடந்ததாகவும் இதன் அவுட்புட்டை காண காத்திருங்கள் என்றும்,அப்படத்தின் ‘விஎப்எக்ஸ்’ பணியின் போது எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்