‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயக நடிகராக மாறியுள்ள சூரி தற்போது, ‘கொட்டுக்காளி’ படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை lநடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க, ‘கூழாங்கல்’ படத்தின் இயக்குனர் பி.எஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார்
மலையாள திரைப்படமான ஹெலன், கும்பலாங்கி நைட், கப்பெல்லா, ஆகிய படங்களில் நடித்துள்ள அன்னாபென் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில், இந்த படம் பல்வேறு விருது விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெர்லினாலே 2024 என்று அழைக்கப்படும் 74வது ஆண்டு பெர்லின் சர்வதேச திரைப்பட விழா கடந்த பிப்ரவரி 15 முதல் 25 வரை ஜெர்மனியின் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
ஆனால் இறுதி சுற்றில் இந்த படம் விருது பெறாமல் வெளியேறியது இந்நிலையில் தற்போது இப்படம், டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.