
ஊர் மக்களால் கொண்டாடப்படும் பழனிச்சாமியின் ஒரே மகள் மாங்கனி.
கல்லூரியில் படித்து வரும் மாங்கனி வீரா என்பவனைக் காதலித்து அவனுடன் சென்றுவிடுகிறாள்.
மகள் சென்ற அவமானம் தாங்க முடியாமல் மாங்கனி அப்பா பழனிச்சாமி உயிரை விட முனைகிறார். தாய் மாமாவும் , ஊர் மக்களும் அவரைக் காப்பாற்றுகின்றனர். ஆனாலும் மகளை நினைத்து வருந்தி படுத்த படுக்கையாகி நோயாளி ஆகிறார்.
நம்பி போன காதலி காதலனால் ஏமாற்றப்படுகிறாள்.
மாட்டிக் கொண்ட மாங்கனி தப்பித்தாளா ? மாங்கனியால் மரணப் படுக்கையில் விழுந்த அப்பா என்ன ஆனார்?
போன்ற கேள்விகளுக்கான பதிலே கவுண்டம்பாளையம்.
பல படங்களில் நடித்த ரஞ்சித் கதாநாயகன் நடித்து இயக்கியிருக்கிறார்
எஸ்.பி.எஸ் மூவிஸ்
சார்பில் ஏ.பழனிச்சாமி, பாசத்தாய் மூவிஸ் சார்பில் எஸ்.சுப்பிரமணியம் இணைந்து
தயாரித்திருக்கின்றனர்.
கதாநாயகனாக ரஞ்சித் கதாநாயகியாக அல்பியா நடிக்க அனீஷ், இமான் அண்ணாச்சி, சௌந்தர்,துரை மகேஷ் கொங்கு மஞ்சுநாதன் எஸ்.பி.எஸ். ஏ.பழனிச்சாமி,
சஜு பழனி சாமி எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.