ப பாண்டி படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கியுள்ள புதிய படம் ராயன். தனுஷின் 51வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன். துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி ஆகியோர்முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தனுஷின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் .பர்ஸ்ட் சிங்கிள், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. . இந்நிலையில் தற்போது இப்படத்தின் 2வது சிங்கிளாக வாட்டர் பாக்கெட் என்ற பாடல் வெளியாகியுள்ளது. . ‘நீ இருக்குறீயே ஓலக் கோட்டாயா’ என தொடங்கும் இப்பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார் சந்தோஷ் நாராயணன் ஸ்வேதா மோகன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர்
இதில் சந்தீப் கிஷன் மற்றும் அபர்ணா பாலமுரளி இடையிலான ரொமான்ஸ் காட்சிகளை தனுஷ் சிறப்பாக படமாக்கியுள்ளார் இப்படம் வரும் ஜூன் மாதம் 13ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.