“ஏழு நாட்கள் டைம் வேண்டும் “என்று போலீசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார் தளபதி பட நடிகை ஹேமா.
அண்மையில் பெங்களூருவில் நடந்த போதை பார்ட்டியில் கலந்து கொண்டு ஜாலி பண்ணியவர்தான் இந்த தெலுங்கு நடிகை ஹேமா. விஜய் ,விஷால் ஆகியோரின் படங்களில் நடித்திருப்பவர்தான் இந்த ஹேமா.
ஹைதராபாத்தில் அடிக்கடி ரேவ் பார்ட்டி நடந்திருக்கிறது. இதில் போதை பொருட்கள் அதிகமாக பழகி இருக்கிறது. விடிய விடிய நடப்பதுதான் ரேவ் பார்ட்டி. கோடீஸ்வரர்கள் ,அரசியல்வாதிகள் ,சினிமாக்காரர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். போலீசின் கடுமையான நடவடிக்கையால் ரேவ் பார்ட்டி பெங்களூருவுக்கு இடம் பெயர்ந்து விட்டது. அண்மையில் நடந்த ரேவ் பார்ட்டியின் நுழைவுக் கட்டணமே 50 லட்சம் ரூபா. அப்படியானால் பார்ட்டியின் தன்மை உங்களுக்கே புரிந்திருக்கும்.
100 பேர்கள் கலந்து கொண்ட இந்த பார்ட்டியில் சர்வ தேச போதைப் பொருட்கள் ,நச்சுப் பாம்பின் விஷம் உள்பட புழங்கி இருக்கிறது. இந்த பார்ட்டியில் ஹேமா கலந்து கொண்டு போதையில் மயங்கி இருக்கிறார் என்பது ரத்த பரிசோதனையில் தெரிந்து விட்டது. இதனால் பெங்களூரு போலீசார் ஹேமாவுக்கு நோட்டீஸ் அனுப்பியதற்குத்தான் 7 நாள் டைம் கேட்டிருக்கிறார். இதற்கிடையில் ஆந்திர ,தெலுங்கானா பிரமுகர்கள் அரசியல்வாதிகள் ,சினிமாப் புள்ளிகள் பெங்களூரு போலீசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக பெங்களூரு போலீஸ் அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். “எங்கள் மாநிலத்துக்கு கெட்ட பெயர் வருவதை அனுமதிக்க மாட்டோம். நடவடிக்கை கண்டிப்பாக இருக்கும் ” என்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
அட தேவுடா !!