உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் அன்னதானம் வழங்கப்படும் என தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற அன்னதானம் நிகழ்ச்சியில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது,, “தவெக கட்சியின் அனைத்து முடிவுகளையும் தலைவர் விஜய் தான் எடுப்பார். அவரது அறிவுறுத்தலின் படியே இன்று அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது,.
மேலும், வரும் ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாள் தினத்தில், தமிழ்நாடு முழுவதும் ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாள் மட்டுமின்றி வருடத்தின் 365 நாட்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனக் கூறிய அவர், சீமானுடன் கூட்டணி அமைப்பது பற்றியும் விஜய் முடிவு செய்வார்.
என்றார்.
அதேபோல், தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறும் அன்னதானம் நிகழ்ச்சியில் சாப்பாடு மீதம் இருந்தால், அதனை அருகில் இருக்கும் முதியோர் இல்லங்களில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.