ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரிப்பில், காளிமுத்து காத்தமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘வேட்டைக்காரி’. இதில் கதாநாயகனாக புதுமுக நடிகர் ராகுல் நடிக்க. கதாநாயகியாக சஞ்சனா சிங் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் இவர்களுடன் வின்செண்ட் செல்வா , வேலுச்சாமி கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.ராம்ஜி இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது இந்நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசுகையில்,”கவிதை எப்போது இசையுடன் இணைந்து கொடி கட்டி பறக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ் பாட்டு உச்சத்தில் கொடி கட்டி பறந்து இருக்கிறது. ஒரு நல்ல கவிதை கிடைத்தால் ஒரு பாடல் ஆசிரியர் பாடலாக்கி விட வேண்டும் என்றுதுடிப்பார். இப்போது நல்ல பாடல்கள் வருவதில்லை தெரியுமா? எதற்கு பஞ்சம் என்றால் பாடல்களை உட்கார வைக்க படத்தில் இடம் இல்லை, படத்தில் பாடலை உட்கார வைக்க இடுப்பு இல்லை.
ஒரு பாடலை ஐந்து நிமிடத்திற்கு கூட பயன்படுத்த உங்கள் படத்தில் இடமில்லை.ஆங்கில படத்தில் படத்தோட படமாய் பாடல்கள் தேய்க்கப்பட்டு விடுகிறது, அதைதமிழ் படத்தில் பயன்படுத்தாதீர்கள். தமிழில் பிறக்கும் போது, தவழும் போது, நடக்கும் போது, இறக்கும் தருவாயில் கூட பாட்டு உள்ளது. படத்தில் பாட்டு நிற்க வேண்டும் என்றால் அதற்கு தனி ஸ்கிரீன் பிளே இருக்க வேண்டும்.நாளுக்கு நாள் திரையரங்குகளில் திரைப்படம் பார்க்கும் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று என் திரையரங்க உரிமையாளர்களாக இருக்கும் நண்பர்கள்தெரிவித்தனர். காதலர்கள் திரையரங்குகளுக்கு வருகிறார்கள், திரைக்கு எதிர்ப்புறம் திரும்பி உட்காருகிறார்கள். சினிமா இங்கு ஓடுகிறது, அவர்கள் படம் அங்கு ஓடுகிறது.கோடை காலத்தில் 50 ரூபாய் கொடுத்தால் 2 மணி நேரம் ஏ சி யில் இருந்து விட்டு வரலாம் என்று திரையரங்குகளுக்கு வருகிறார்கள். சினிமா வடிவம் மாறுகிறது அழிந்து விடவில்லை, மனிதன் இருக்கும் வரை சினிமா இருக்கும் அது தன் வடிவத்தை தான் மாற்றிக் கொள்ளும். ” இவ்வாறு வைரமுத்து பேசினார்