ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள பீட்டா அமைப்பின் ஆதரவாளரான திரிஷாவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரது டுவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. இதனால் வெறுத்துப் போன திரிஷா டுவிட்டரை விட்டே வெளியேறினார்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தால் அவர் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பை நடத்துவதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் திரிசாவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் கொடுக்க வந்த திரிஷாவின் தாய் உமா செய்தியாளர்களிடம் பேசுகையில்,த்ரிஷா பீட்டாவுக்கு ஆதரவு தெரிவித்தது உண்மை தான். வெளிநாட்டு நாய்கள் அல்லாமல் உள்நாட்டு நாய்களையே மக்கள் வளர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவர் பீட்டாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.பீட்டாவின் மூலம் அவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எதுவும் கூறவில்லை. தனிப்பட்ட முறையிலேயே அவர் நாய்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.நாங்களும் தமிழர்களே. எங்களுக்கு மட்டும் தமிழ் உணர்வு இல்லாமல் போகுமா? ஆனால்,கடந்த 6, 7 ஆண்டுகளாக அவர் பீட்டா விஷயத்தில் ஆர்வம் காட்டுவது இல்லை.என்கிறார்.