சத்யராஜ் மகள் திவ்யா பிரபல ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார் . சமீபத்தில் பிரபல அரசியல் கட்சி ஓன்று தன்னை தனது கட்சியில் இணையுமாறு கோரிக்கை விடுத்ததாகவும் அந்நாள் தான் அகக்கட்சியில் சேர மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார் . மேலும் மக்களவைத் தேர்தலுக்குப் பின் அரசியல் கட்சி ஒன்றில் இணைய இருப்பதாகவும் கூறியிருந்ததும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
தற்போதுமக்களவைத் தேர்தல் முடிவடைந்து 40 தொகுதிகளும் திமுக கூட்டணி வசமாகியுள்ளது. இந்நிலையில்,திவ்யா சத்யராஜ் தனது சமூக வலைதளத்தில் “40க்கு 40, இது திராவிட மண், எப்போதும் வெற்றி நமக்கே’ என்று பதிவு செய்துள்ளார்.இப்பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், திவ்யா சத்யராஜ் விரைவில் திமுகவில் இணைவார் என பதிவிட்டு வருகின்றனர்
.திவ்யா சத்யராஜ் அட்சய பாத்திரம் அறக்கட்டளையின் நல்லெண்ணத் தூதுவராகவும், மகிழ்மதி இயக்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பின் மூலம் மணிப்பூர் மற்றும் இலங்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கி வருகிறார்.திவ்யாசத்யராஜ் வரும் ஜூலை மாதம் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது