நடிகர், இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன் திருமணம், வரும் ஜூன் 9-ஆம் தேதி திருத்தணி கோவிலில் நடக்கிறது. நீண்ட நாட்களாக காதலித்த பெண்ணை பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
இவரது திருமணம் குறித்து வெங்கட் பிரபு, ‘இது திருத்தணி கோவிலில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்ளும் மிகவும் எளிமையான திருமணம் எனவே ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் யாரும் வரவேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் பிரேம்ஜி அமரன் தனது நண்பர்களுக்கு சிறப்பு ‘பேச்சுலர்’ பார்ட்டி வைத்துள்ளார். ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் அதில் பங்கேற்றுள்ள நிலையில் அதன் புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.