நடிகை சுனைனா, தொடர்ந்து தமிழில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் தொடர்ந்து கிடைத்த பட வாய்ப்புகளால் முன்னணி நடிகர்களுன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வந்தது என்றாலும் தமிழில் இவர்க்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் அமைய வில்லை
இந்நிலையில், 35வயதாகும் சுனைனாகடந்த சில தினங்களுக்கு முன்னதாக தன்னுடைய (முகம் தெரியாத) காதலரின் கை மீது கையை வைத்தபடி அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதற்கு பூட்டு எமோஜியையும் வெளியிட்டு ரசிகர்களை பல யூகங்களை செய்ய விட்டிருந்தார்.. இந்நிலையில் தற்போது தன்னுடைய திருமண நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முந்தைய பதிவைப்போலவே தன்னுடைய வருங்கால கணவரின் விபரங்கள்,மற்றும் புகைப்படத்தை வெளியிடாமல், தங்களது நிச்சயதார்த்தம் நிறைவடைந்துள்ளதாக கூறி, மோதிரம் மாற்றிக் கொண்ட புகைப்படத்தை மட்டும் பகிர்ந்து,தனக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள சுனைனா, அதை மிகவும் பெரிதாக நினைப்பதாகவும் கூறியுள்ளார்