மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல் ஹாசனை , திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பராயன் மற்றும் செல்வராஜ் மக்கள் நீதி மையத்தின் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.
அத்துடன் திருப்பூரில் பரப்புரை செய்தமைக்கு, கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்கள்.
அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மு.வீரபாண்டியன், க.மாரிமுத்து, மாசிலாமணி, காசி விஸ்வநாதன், வகிதா நிஜாம், லி.உதயகுமார், .கேசவராஜ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர்ஆ.அருணாச்சலம் உடனிருந்தார்