விஜய் சேதுபதியின் ’மகாராஜா’ திரைப்படம் நேற்று துபாய், புர்ஜ் கலிஃபாவில் கொண்டாடப்பட்டது!’தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து நடிகர் விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படமான ’மகாராஜா’ என்ற படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை ‘குரங்கு பொம்மை’ நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
விஜய் சேதுபதியின் 50 வது படம் என்பதால், இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் ‘மகாராஜா’ திரைப்படத்தின் முன்னோட்டம் இடம்பெறும் நிகழ்வை பட நிறுவனம் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் அனுராக் கஷ்யப் கலந்து கொண்டார் நிகழ்வில் விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்