suresh
‘ஹரா ‘என்றால் பாவங்களை போக்குகிற சிவபெருமான் என்கிறது அகராதி.
பதினாறு வருஷங்களுக்கு பிறகு நடிகர் மோகன் கதாநாயகனாகவே களம் குதிக்க ‘வைக்கப்பட்டிருக்கிறார்’ வெள்ளிவிழா நாயகன் . ஹரா என்கிற படம் அவரை வரவேற்றிருக்கிறதா ,புறம் தள்ளி விட்டதா?
மனைவி அனுமோல், மருத்துவம் படிக்கும் மகள் அனித்ரா நாயர் ஆகியோரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் மோகன். சராசரியான குடும்பஸ்தர். மகள் தற்கொலை செய்து கொள்ள .அதனால் ராம் என்கிற தனது பெயரை தாவூத் இப்ராகிம் என்று மாற்றிக் கொள்ள ( ? ) மகள் தற்கொலைக்கான காரணத்தைத் தேடிப் போகிறார்.அந்த காரணத்தை தெரிந்து கொள்வதால் என்ன வெங்காயம் கிடைக்கப் போகிறது ?அழுத்தமாக இல்லை . மோகன்.உடலில் சில மாற்றங்கள். நீண்ட தாடி . நடிப்பு? அதை கேட்டு என்ன ஆகப்போகிறது?
மோகனுக்கு ஜோடியாக அனுமோல் . சிறந்த நடிகை . பெண் பாவம் பொல்லாதது. இவருக்கே உண்பதற்கு ஒன்றுமில்லை என்ற பிறகு மகளுக்கு மட்டும் விருந்து வைக்கமுடியுமா ?அனித்ரா அழகாக இருக்கிறார்.அறிமுக நடிகர் சந்தோஷ் பிரபாகரன் ,வரவேற்கலாம் .
சுரேஷ்மேனன் , சாருஹாசன்,யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கின்றனர்.மொட்டை ராஜேந்திரன்,வனிதாவிஜயகுமார்,ஆதவன்,சிங்கம்புலி ஆகியோரும் வந்து போகிறார்கள்.
ரஷாந்த் அர்வின் இசை,.
பிரகாத் முனுசாமி,மனோதினகரன்,மோகன்குமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். .
கதை, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் விஜய்ஸ்ரீஜி .
மோகன் என்கிற வெள்ளிவிழா நாயகனை வைத்து வெற்றி விழா காண ஆசைப் பட்டிருக்கிறார் இயக்குநர். ஆசைப்படுவது தப்பில்லை .
ஹர ஹர ஹர .. கர .. கர .. கர !
–தேவிமணி .