நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா, ‘பட்டத்து யானை’ என்ற படத்தில் விஷால் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், கன்னட மொழியிலும் நடித்துள்ளார். தற்போது அர்ஜுன் இயக்கத்தில்இன்னும் பெயரிடப்படாத ‘பான் இந்தியா’ படத்தில் நடித்து வருகிறார்
.இவரும் நடிகர், தம்பி ராமையாவின் மகன் நடிகர் உமாபதியும் காதலித்து வந்தனர்.உமாபதி, ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற படம் மூலம் அறிமுகமானார். அடுத்து, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ‘தண்ணி வண்டி’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார் தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள பித்தல மாத்தி என்ற படம் வெளியாக வுள்ளது. நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ என்ற சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக உமாபதி கலந்து கொண்டார்.
அந்த சமயத்தில் அர்ஜுனின் மகளுக்கும் இவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் இருவரின் காதலுக்கும் குடும்பத்தினர் இருவீட்டு குடும்பத்தினரும் இவர்களது திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த அக்டோபர் மாதம் சென்னையை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலில் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிகழ்வில் இருவருக்கும் ஜூன் மாதம் 10 ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலில்வேத மந்திரங்கள் முழங்க இன்று காலை 10.30 மணியளவில் நடிகர் உமாபதி மணமகள் ஐஸ்வர்யா கழுத்தில் தாலி கட்டினார் .
இந்த திருமணத்தில் இரு குடும்பத்தரின் உறவினர்கள் ,நண்பர்கள் மற்றும்
நடிகர்கள் விஷால்,கார்த்தி,துருவா சர்ஜா,ஜெகபதி பாபு,சமுத்திரகனி,கே.எஸ்.. ரவிக்குமார்
விஷாலின் தந்தை ஜிகே.ரெட்டி, தயாரிப்பாளர் எஸ் ஆர்.பிரபு,விஜய குமார்,செந்தில்,அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத், நடனஇயக்குனர் சாண்டி மாஸ்டர் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதையடுத்து வரும் ஜூன் 14-ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.