தமிழ் சினிமாவில் ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்த ‘மைனா’ திரைப்படம் இவருடைய திரை உலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.அடுத்தடுத்து சிறந்த கதைக்களம் கொண்ட படங்களையும், அழுத்தமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். பின்னர் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், நடிகர் விஜய் ஜோடியாக ‘தலைவா’மற்றும் .’தெய்வத்திருமகள்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். படத்தில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் ஏ.எல்.விஜய்க்குமிடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 2013 ஆம் ஆண்டு, இரு தரப்பு குடும்பத்தினர் சம்மதத்துடன், ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.திருமணத்திற்கு பிறகும் அமலாபால் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்.இதுவே விஜய் – அமலாபால் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாக அமைந்தது. திருமணம் ஆன நான்கு வருடத்தில், இருவரும் ஒருமித்த மனதுடன் விவாகரத்து பெற்ரூ பிரிந்தனர்.
இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் 26-ஆம் தேதி அமலா பாலின் பிறந்தநாள் அன்று தன்னுடைய காதலன் ஜெகத் தேசாய் புரோபோஸ் செய்த, புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.தொடர்ந்து தன்னுடைய காதலன் புரோபோஸ் செய்த ஒரே வாரத்தில் அமலா பால், ஜெகத் தேசாயை 2 வது திருமணம் செய்து கொண்டார்.திருமணத்தின் போதே .அமலாபால் கர்ப்பமாக இருந்ததாகவும் இதை தொடர்ந்தே உடனடியாக திருமண அறிவிப்பை வெளிவிட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது அதை உறுதிப்படுத்துவது போல்,அமலாபால் ஜெகத் தேசாய் ஜோடிக்கு திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆன நிலையில்,அமலா பால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்தார்.இந்நிலையில், அமலா பாலுக்கு கடந்த 11ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.பிறந்த இந்த குழந்தைக்கு ILAI என பெயர் வைத்துள்ளதாக அமலா பாலின் கணவர் ஜெகத் தேசாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அதில் அமலா பால் குழந்தையுடன் மகிழ்ச்சியுடன் வரும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram