நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘கோட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.இவருடன் மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், மாஸ்டர் பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, லைலா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, தாய்லாந்து,இலங்கை ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் நடந்தது.இப்படம் இது டைம் ட்ராவலை மையப்படுத்தி உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில்,நிலையில், தற்போது கோட் படத்தின் கதை பற்றிய தகவல்சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது அதாவது கடந்த 2004ல் நடந்த ரஷ்யாவின் மாஸ்கோ நகர மெட்ரோவில் ஒரு தீவிரவாதி உடம்பில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு வந்து வெடிக்க வைத்து நடத்திய தற்கொலை தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர்.இந்த அதி பயங்கர தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்களை பிடிப்பது தான் இப்படத்தின் கதை என கூறப்படுகிறது.
இந்நிலையில்,நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாக உள்ள கோட் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான “சின்ன சின்ன கண்கள்” பாடலின் க்ளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் மற்றும் மறைந்த பின்னணி பாடகி பவதாரிணி இணைந்து பாடிய ” சின்ன சின்ன கண்கள்” எனும் குடும்ப பாடல் நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், அதன் க்ளிம்ப்ஸ் தற்போது வெளியாகி உள்ளது.மறைந்த இளையராஜாவின் மகள் பவதாரணியின் குரலை ஏஐ மூலம் அவரது சகோதரர் யுவன் சங்கர் ராஜா கொண்டு வந்து ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார்.வீடியோ இணைப்பு கீழே …..
Here is a chinna promo of a song with a big heart ♥️
Vocal by @actorvijay sir & #Bhavatharini 🎤
A @thisisysr magical 🎼
A @kabilanvai lyrical ✍🏼
A @vp_offl Hero#TheGreatestOfAllTime#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @Ags_production @archanakalpathi… pic.twitter.com/IxkiYuM3g1— T-Series South (@tseriessouth) June 21, 2024