நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக அஜர்பைஜானில் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக நடித்துவந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முனபு திடீரென சென்னை திரும்பினார் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை என்றும்,அவர் தனிப்பட்ட சில பணிகளுக்காக அவர் சென்னை திரும்பி இருப்பதாகவும் கூறப்பட்டது.இந்நிலையில்,அஜித்தின் மனைவி ஷாலினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாகவும்அவரை அவரை பார்ப்பதற்காக தான் அஜித் சென்னை திரும்பினார் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில், தற்போது ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அறுவை சிகிச்சை முடிந்து உட்கார்ந்திருக்கும் ஷாலினி கையை அன்புடன் அஜித் பிடித்து இருப்பது போன்று உள்ளது. இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ’அன்பு எங்கும் பரவட்டும் ’என்று ஷாலினி பதிவிட்டுள்ளார் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.