தன் மீது அவதூறு கருத்துக்களை கூறிய பீட்டா அமைப்புக்கு நடிகர் சூர்யாவக்கீல் நோட்டீசு அனுப்பியுள்ளார். இதன் விபரம் வருமாறு,
பீட்டா அமைப்பு, நடிகர் சூர்யா சி3 படத்தை விளம்பரம் செய்யத் தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடுகிறார் என்ற ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. முற்றிலும் தவறான இந்த செய்தி சூர்யா மற்றும் அவரின் குடும்பத்துக்கு வருத்தத்தை அளித்துள்ளது. பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சூர்யா போராடி வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்றே. ஆதலால் தவறான செய்தியை பரப்பி வரும் பீட்டா அமைப்பை மன்னிப்பு கோரும்படியும் , அவர்கள் பரப்பிய செய்தி தவறானது என்பதை தெரிவிக்கும் வகையில் பிரஸ் ரிலீஸ் ஒன்றை 7 நாட்களுக்குள் வெளியிடும்படியும் கூறி நடிகர் சூர்யாவின் வக்கீல் ஆர்.விஜய் ஆனந்த் பீட்டா அமைப்புக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.SURIYA – PETA NOTICE (20 JAN 2017) (1)