இன்று காலையில் நிகழ்ந்த சில விரும்பத்தகாத செயல்களால் மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதை கண்டு உள்ளம் பதை பதைக்காத மனிதர்களே இல்லை என்று சொல்லி விடலாம்.
இது குறித்து கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,”
இதுவரை பொதுச்சொத்திற்கு எச்சேதமுமில்லாமல் நடந்த இப்போராட்டம் அமைதி இழக்கக்கூடாது. இந்தியாவின் மூத்த தலைமை ஆவன செய்ய வேண்டும். செய்யும். வீரத்தின் உச்சகட்டமே அஹிம்ஸை. அறவழிப் போராளிகள் ரத்தக் காயம் படுவது இதுவரை நிகழாததல்ல.
அமைதி காக்கும் கடமை உமது. வெகுளாதிருத்தலே விவேகம். சட்டமன்றத்தில் என்ன கூறப்போகிறார்கள் என்று மாணவர் சமுதாயம் காத்திருந்தபோது அவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவேண்டும்?
மாண்புமிகு தமிழக முதலமைச்சரிடம் பேசினேன். முக்கியமான கேள்வியை அவரிடம் எழுப்பினேன். அவர் விரைவில் பதில் அளிப்பார். அவர்கள் உங்களைத் திருப்திப்படுத்த ஆவலாக உள்ளார்கள்.
அமைதியாக இருக்கவும். என்னுடைய தொடர்புகளின் மூலம் பிரதமருக்கும் தகவல் தெரிவித்தேன். எனவே அனைவரும் அமைதி காக்கவேண்டும்.
மாணவர்கள் மீது இன்று காலை போலீசார்தடியடி நடத்தி கலைத்தனர் இது குறித்து கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,