சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்துக்கு ‘போட்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார்.இதில் கௌரி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தணிக்கை குழுவினரின் ‘யு ‘ சான்றிதழ் பெற்று, விரைவில் வெளியாக உள்ள இப்படம் குறித்து அதன் இயக்குனர் சிம்பு தேவன் கூறுகையில்,”எனக்கு சின்ன வயசுல கிடைத்த ஒரு இன்ஸ்பிரேஷன் தான் இப்படம் உருவாக காரணம்.கொரோனா காலகட்டத்துல ஏதாவது செய்யணும்னு , லண்டனில் உள்ள எனது நண்பர் ஸ்ரீகணேஷ் ,பெங்களுர் ஜெயராஜ் ஆகியோருடன் பேசுகையில், 1920 களில் நடந்த முதல் உலகப்போர் பத்தி பண்ணலாம்னு முடிவு பண்ணி பேசினேன்.அந்த சமயத்துல இன்னொரு நன்பன் வீட்டுக்கு போனப்ப, ஒரு தகவல் சொன்னார் அதாவது அவங்க தாத்தாவோட தாத்தா,மீனவர், 2 ஆம் உலகப்போரின் போது 1943 களில் சென்னையில் ஜப்பான் காரன் குண்டு போடப் போறான்னு 6 மாசமா ஒரே பரபரப்பு . இங்குள்ள மக்கள் பயத்திலேயே வாழ்ந்துருக்காங்க. ஒவ்வொரு முறை அறிவிப்பு வெளியாகும் போதும், பதுங்கு குழிகள் மற்றும் கிடைக்கும் இடங்களில் உயிரை கையில் பிடித்து கொண்டு பதுங்கி விடுவார்களாம். கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் சென்னையை விட்டே வெளியேறிட்டாங்களாம். ஆனா, மீனவர்கள் மட்டும் ‘போட்’ ஐ எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் கடலுக்குள் சென்று விடுவார்களாம். அந்த ஒரு விஷயம் போட் படமாக உருவாகியிருக்கிறது. “இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சி செய்த சமயம். ஜப்பான் மெட்ராஸ் மாகாணத்தின் மீது குண்டுகளை வீசியது. உயிர்பிழைக்க தமிழ், தெலுங்கு, மலையாளி, மார்வாடி என பல மொழி பேசும் ,10 பேர் ஒரு படகில் ஏறி வங்காள விரிகுடா கடல் பகுதியில் ஒதுங்குகின்றனர்’ .அப்ப படகில் ஓட்டை விழுந்துரும். படகு மூழ்காமல் இருக்க, மற்ற 7பேர் உயிர் பிழைக்க 3 பேர் கடலில் குதித்து உயிர் தியாகம் செய்ய வேண்டும். அவர்கள் யார் என்பதை அந்த 10 பேரும் தான் முடிவு செய்ய வேண்டும். அந்த சமயத்தில் மிகப்பெரிய சுறா மீன் ஒன்றும் அவர்களை நெருங்குகிறது . இறுதியில் என்ன நடக்கிறது என்பதை தான் சர்வைவல் திரில்லர் மற்றும் பொலிட்டிக்கல் காமெடியாக சின்னதா ஒரு பேண்டஸி கலந்து சொல்லியிருக்கிறேன் என்கிறார்