‘டியூப்லைட்’ திரைப்படம். புதுமுகங்கள் இந்த்ரா – அதித்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘டியூப்லைட்’ திரைப்படத்தில் நடிகர் பாண்டியராஜன் மிக முக்கிய கதாபாத்திரத்திலும், ‘டம்மி டப்பாசு’ புகழ் பிரவீன் பிரேம் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.”ஒரு டியூப்லைட் பிரகாசமாக ஒளிர்வதற்கு குறைந்தது 3 முதல் 5 வினாடிகள் வரை தேவை. ஏறக்குறைய அதே குணாதிசயத்தை தான் எங்கள் டியூப்லைட் படத்தின் கதாநாயகனும் பெற்று இருக்கிறார். சாதாரணமாக சொல்லப்படும் எந்த ஒரு விஷயமும், அவருக்கு ஐந்து வினாடிகள் கழித்து தான் கேட்கும். இது தான் டியூப்லைட் படத்தின் கதை கரு. இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் பாண்டியராஜன் சார் நடித்து இருக்கிறார். இதுவரை யாரும் கண்டிராத வித்தியாசமான பாண்டியராஜனை ரசிகர்கள் காண்பார்கள் என்பதை உறுதியாகவே சொல்லுவேன். நான் நகைச்சுவை ஜாம்பவான்கள் சார்லி சாப்ளின் மற்றும் மிஸ்டர் பீன் ஆகியோரின் மிக பெரிய ரசிகன். ஆதலால், வசனங்கள் இல்லாமல், உடல் அசைவுகளை கொண்டு உருவாக்கப்படும் நகைச்சுவை யுக்தியை இந்த படத்தில் கையாண்டு இருக்கின்றேன். சமீப காலமாகவே இந்த வகையான நகைச்சுவை காட்சிகள் நம் தமிழ் படங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வருகிறது. நிச்சயமாக எங்களின் டியூப்லைட் படம் உடல் அசைவுகளை கொண்டு உருவாக்கப்படும் நகைச்சுவை முறைக்கு புத்துயிர் கொடுக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் டியூப்லைட் படத்தின் கதாநாயகனும், இயக்குநருமான இந்த்ரா.