ஐ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தை நடிகர் விஜய், விக்ரம், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் பங்கேற்று ஆட்டம், பாட்டம் என விடிய விடிய கொண்டாடினர். இக்கொண்டாட்டம் சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.’ஐ’ படம் மூலம் முதல் முறையாக ரூ 100 கோடி கிளப்பில் சேர்ந்துவிட்ட நடிகர் விக்ரம் ,மிக வும் உற்சாகத்துடன் பங்கேற்றார். நடிகர் விஜய்யும், இயக்குனர் ஷங்கரும் இந்த விருந்தில் பங்கேற்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களின் குடும்பத்தினரும் இதில் கலந்துகொண்டனர்.இயக்குநர் ஷங்கர் அடுத்து இந்தியில் வெளியான பிகேயை தமிழில் (நண்பன் படம் போல )விஜய்யை வைத்து இயக்கப் போவதாக வெளியாகி வரும் செய்திகள் இந்த விருந்தின் சந்திப்பு நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்துவதாக உள்ளது.