விஜய்யின்”தெறி’ படத்தை இயக்கிய அட்லி மீண்டும் விஜய்யின் 61-வது படத்தை இயக்குகிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காவலன் படத்துக்குப் பிறகு விஜய்யுடன் வடிவேலு இணைந்து நடிக்கவுள்ளார். விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் காஜல் அகர்வால் நடிக்க உள்ளார்கள். எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்கிறார். இப்போது இந்தக் குழுவில் நகைச்சுவை நடிகர் சத்யனும் இணைந்துள்ளார். இப்படத்தின் கதையை விஜயிடம் அட்லி சொல்லும் போதே கண்டிப்பாக ஒரிஜினலாக முறுக்கு மீசை மற்றும் தாடி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தாராம்.இதையடுத்து அட்லீக்காக விஜய் முறுக்கு மீசை தோற்றத்திற்கு மாறி வருகிறாராம்.