மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் படைவீரன் எனும் படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி வந்தது. இந்நிலையில் இன்று காலை பொன்ராம் இயக்கத்தில் முகேஷ் செல்லையா தயாரிப்பில் சரத்குமார்-சண்முகபாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படகுழுவினர் விஜயகாந்த நினைவிடத்தில் நல்லாசி பெற்றனர். விரைவில் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த விபரங்கள் மற்ற நடிகர் நடிகைகளின் விபரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது