நடிகை குஷ்பூ இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காலில் கட்டு போடப்பட்டுள்ள நிலையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். தனக்கு துணையாக இருப்பது தன்னுடைய நாய் மட்டும் தான் என்றும் குஷ்பூ அதில் பதிவிட்டுள்ளார் ஏற்கனவே குஷ்புவிற்கு ஒரு முறை காலில் அடிபட்டு இருந்தது. சில மாதங்கள் ஓய்வுக்கு பிறகு சரியாகி இருந்தது. இப்போது மீண்டும் இன்னொரு காலும் அடிபட்டு இருக்கிறது.
குஷ்பூவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் குஷ்புவிற்கு என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் அதோடு பல நடிகைகள் குஷ்பூ மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று அவருக்கு ஆறுதல் கூறியும் வருகிறார்கள்.