ரசிமீடியா மேக்கர்ஸ், வி.வி.பிலிம்ஸ் சார்பில் ஏ.ஆர்.கே ராஜராஜா, ஆவடி சே.வரலட்சுமி தயாரித்துள்ள புதிய படம் அரசி. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் கார்த்திக் ராஜு, அங்கனாராய், மனிஷா ஜஸ்னானி, சித்தார்த்தராய், அபிஷேக், ராட்சஷன் வினோத்சாகர், ஹாசினி, சுப்ரமணியம் சிவா, கே.நட்ராஜ்,சாப்ளின் பாலு, மோகித் ராஜ், மீரா ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ஹரி, சிவா மதன், சக்தி ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தை சூரியகிரண்,ஏ.ஆர்.கே ராஜராஜா இயக்கி யுள்ளனர். வக்கீல், போலீஸ் அதிகாரி, ரவுடி ஆகிய மூன்று பேர்களின் நடுவில் நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘அரசி’. வரும் செப்டம்பர் மாதம் வெளியாகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவை செல்வா.ஆர் கவனிக்க,சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.