ஹாலிவுட் நட்சத்திரம் மில்லா ஜோவோவிச் நடிப்பில் கடந்த 15 வருடமாக வெளிவந்து கொண்டிருக்கும் ரெசிடனட் ஈவில் தொடரின் நிறைவு பகுதி திரைப்படமாக பிப்ரவரி 3ஆம் தேதி வெளிவரவுள்ளது. ரெசிடனட் ஈவில், ஃபைனல் சாப்டர் (Resident Evil ; Final Chapter ) எனப் பெயரிடப்பட்டுள்ளது, சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. மேலும், சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ‘கட்டபாவ காணோம்’ ‘இனிமே இப்படிதான்’ புகழ் சந்தோஷ் தயாநிதி இசையில் சுனிதா சாரதி குரலில் ‘யாரோ இவள் ‘ என்ற விளம்பர பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரபல ரெசிடன்ட் ஈவில் தொடரின் கடைசி பாகமான இப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளிவருகிறது.