சுந்தர் சி – வடிவேலு காம்பினேஷன் படங்கள் பெரும்பாலும் தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,தற்போது இருவரும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படத்திற்கு ’கேங்கர்ஸ்’ என தலைப்பிடப்பட்டுள்ளது இப்படத்தில் சுந்தர் சி, வடிவேல்ஆகியோருடன் , கேத்தரின் தெரசா, ஹரிஷ் பேரடி, மைம் கோபி, மதுசூதன் ராவ், அருள்தாஸ், முனீஸ்காந்த், பக்ஸ், காளையன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து இயக்குனர் நடிகர் சுந்தர் சி கூறியதாவது,” தமிழில் (ஹெய்ஸ்ட்) திருட்டு சம்பந்தப்பட்ட
படங்கள் அதிகம் வருவதில்லை, அப்படியே வந்தாலும் பெரிய வங்கியில், திட்டமிட்டு கொள்ளை அடிக்கும் கதை அம்சம் கொண்ட படங்கள் தான் இதுவரை வந்துள்ளது. இந்த படம் அதிலிருந்து முற்றிலும் வித்தியாசமான கதைக்களம் கொண்டதாக இருக்கும்.இதில் கைப்புள்ள, வீரபாகு போன்ற கதாப்பாத்திரங்கள் மாதிரி சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருக்கிறார், இந்த கேரக்டரை ரசிகர்களால் மறக்கவே முடியாது, மேலும் இதில் வடிவேலு ஐந்து விதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார், அவர் வரும் காட்சிகளில் எல்லாம் நம்மை அறியாமலேயே சிரிப்பு வந்து விடும். நிச்சயமாக வடிவேலு ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய காமெடி காத்திருக்கிறது, நாங்கள் வடிவேலு சம்பந்தப்பட்ட படமாக்கும் போதே சிரிப்பை அடக்கிவிட்டு, படமாக்க பெரும் பாடுபட்டோம்.இந்தப்படத்தோட கதை என்னன்னு பார்த்தா,”ஒரு வாத்தியார், ஒரு ஆட்டோ டிரைவர், ஒரு பார் ஓனர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகிய நான்கு சாதாரண மனிதர்கள் ஒன்று கூடி ஒரு சிறிய நகரத்தில் உள்ள வங்கியை கொள்ளையடிக்கின்றனர். அவ்வாறு கொள்ளை அடிக்கும் போது நடக்கும் சம்பவங்களைத் தான் அதிரடி நகைச்சுவை திரைப்படமாக்கி இருக்கிறோம் .என்கிறார்.