இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அசல் தமிழ் இணையத் தொடரான ‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் இந்த தொடருக்கு பாலகுமாரன் முருகேசன் கதை எழுத, தி வைரல் ஃபீவர் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.இந்த இணையத் தொடருக்கு எம். எஸ். கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார்.
எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த நகைச்சுவை இணைய தொடர் – தமிழகத்தின் தொலைதூர கிராமமான தலைவெட்டியான் பாளையத்தில் தனது புதிய மற்றும் அறிமுகம் இல்லாத சூழலில் சவால்களை எதிர்கொள்ளும்.. மாநகரத்தை சேர்ந்த ஒருவரின் பயணத்தை மையமாகக் கொண்டிருக்கிறது.இந்த இணையத் தொடரில் அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி , பால்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘தலைவெட்டியான் பாளையம்’ பிரைம் வீடியோவில் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செப்டம்பர் 20ஆம் தேதி அன்று தமிழிலும், ஆங்கில வசனங்களுடனும் பிரத்யேகமாக வெளியாகிறது. ‘
இந்த இணைய தொடர் பற்றி இயக்குநர் நாகா பேசுகையில், ” தலை வெட்டியான் பாளையம் கிராமப்புற வாழ்வை பற்றிய ஓர் இதயப்பூர்வமான கதையை விவரிக்கிறது. சமூகம் மற்றும் பாரம்பரியத்தின் முக்கிய கருப் பொருளுடன் நகைச்சுவையையும் கலந்திருக்கிறது. தி வைரல் ஃபீவர் நிறுவனம் மற்றும் பிரைம் வீடியோவுடன் இணைந்து பணிபுரிவது அற்புதமான அனுபவம். இந்த இணையத் தொடரை உருவாக்குவதில் என்னுடைய பார்வையின் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையும், அவர்கள் வழங்கிய அசைக்க முடியாத ஆதரவும் என்னை கவர்ந்தது. மேலும் திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் இணைந்து பணியாற்றியதும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் ஒத்துழைப்பு இந்த கதைக்கு மேலும் வலு சேர்த்தது. பிரைம் வீடியோவின் சர்வதேச அளவிலான அணுகுமுறைக்கும் நன்றி. தமிழ்நாட்டிற்குள்ளும், இந்தியாவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் எங்களின் உழைப்பை எடுத்துச் செல்வதால் பிரைம் வீடியோவிற்கு மேலும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இணையத் தொடரை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.