தமிழில் இளம் ஹீரோவாக வலம்வரும் சிவகார்த்திகேயனை, கன்னட நடிகர் ராஜ்குமாரின் வாரிசு சிவராஜ்குமாருக்கு ரொம்பவே பிடித்துப்போய் விட்டதாம்.இதன் காரணமாக அவரை பெங்களூரு வரவழைத்த சிவராஜ்குமார், தன்னுடன் ‘வஜ்ரகயா’ என்கிற படத்தில், ஒரு பாடலில் சிறப்புத்தோற்றத்தில் ஆடவைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, மலையாள நடிகர் திலீப்பும், தெலுங்கு நடிகர் ரவிதேஜாவும் கூட இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் கள் வெளியாகியுள்ளன . கன்னட நடிகருடன் திடீர் நட்பு பாராட்டும் சிவகார்த்திகேயன் பெங்களூரில் கூடிய விரைவில் பண்ணை வீடு ஒன்றை வாங்க உள்ளதாகவும் ,அதற்கு ராஜ்குமார் வாரிசுகள் உதவி செய்வதாகவும் கோடம்பாக்கத்தில் செய்திகள் றெக்கை கட்டி கொண்டிருக்கின்றன.