‘இந்தியன்-2’ படத்தை தொடர்ந்து கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்லைப்’ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இம்மாதம் நிறைவடைய உள்ள நிலையில், கமல்ஹாசன் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு அவர் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ‘ஏ ஐ’ தொழில் நுட்பம் குறித்துக் கற்றுக்கொள்ள உள்ளார்..இதற்காக அவர் அங்கு 45 நாட்கள் தங்கி இருப்பார். 90 நாட்கள் கொண்ட இந்தஏ.ஐ தொழில்நுட்பம் குறித்த படிப்பை 45 நாட்களில் முடித்துக்கொண்டு சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருங்காலத்தில் சினிமாத்துறை ஏ.ஐ. டெக்னாலஜி உதவியுடன் தான் இயங்கும் என்பதை தெரிந்துகொண்டுள்ள சினிமாவின் ‘என்சைக்ளோபீடியா’ கமல்ஹாசன், அதற்காக தன்னை தயார்படுத்திக்கொண்டுள்ளது பலரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு அபுதாபியில் அளித்த பேட்டி ஒன்றில் கமல்ஹாசன், “எனக்கு புதிய தொழில்நுட்பத்தில் ஆழ்ந்த ஆர்வம் உள்ளது, மேலும் எனது திரைப்படங்கள் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் பரிசோதனை செய்வதை நீங்கள் அடிக்கடி பார்க்கலாம். மேலும் சினிமாதான் என் வாழ்க்கை. என் சம்பாத்தியம் அனைத்தும் பல வழிகளில் என் திரைப்படங்களுக்குச் சென்றுவிட்டது. நான் ஒரு நடிகன் மட்டுமல்ல, ஒரு தயாரிப்பாளரும் கூட, நான் திரைப்படங்களில் இருந்து சம்பாதித்த அனைத்தையும் திரைப்படத்துறையில் மீண்டும் முதலீடு செய்கிறேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது