வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று கோலாகலமாய் நடந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,””ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் படத்திற்காக மீண்டும் இங்கு வந்திருக்கிறேன். ஒரு டைரக்டருக்கு ஒரு படம் தோல்வியானால் அடுத்து ஹிட் படம் கொடுக்கிற வரைக்கும் நிம்மதியே இருக்காது. அதேபோல் ஹிட் படம் கொடுத்த ஒரு இயக்குனருக்கு முந்தைய படத்தை விட சிறப்பாக அடுத்த படத்தை கொடுக்க வேண்டும் என்று நிம்மதி இருக்காது. இன்றைய காலகட்டத்தில் நல்ல இயக்குனர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. முன்பெல்லாம் கதை திரைக்கதை ஒருவருடையதாக இருக்கும். இன்னொருவர் படத்தை இயக்குவார் . ஆனால் இன்றைக்கு எல்லாமே ஒரே ஆள் செய்கிறார். அதோடு ஒரு படம் ஹிட் அடிக்க மாஸ் ஹீரோக்களுக்கு மட்டும் போதாது. நல்ல தயாரிப்பு நிறுவனமும் வேண்டும்.நான் ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் படத்தை பார்த்தேன். நன்றாக இருந்தது. ஆனால் எல்லா நல்ல படங்களையும் பாராட்டும் நான் அப்போது ஜெய்பீம் படத்தை பாராட்டவில்லை. இந்த நேரத்தில் தான் ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேலிடம் ஒரு நல்ல லைன் இருப்பதாக என்னுடைய மகள் சவுந்தர்யா கூறினார். அதையடுத்து அவரை சந்தித்து பேசினேன். அப்போது அவர் இந்த படத்தில் நீங்கள் மெசேஜ் சொல்வீர்கள் என்றார். அதெல்லாம் எனக்கு செட்டாகாது. மக்கள் கொண்டாடுவது போன்ற கமர்சியல் கதையாக சொல்லுங்கள் என்றேன்.அவரும் ஒரு 10 நாள் டைம் கேட்டார். ஆனால் அடுத்த 2 நாட்களில் கால் பண்ணி கமர்சியலா படம் பண்ணரெடி. அதேசமயம் லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்று இல்லாமல் வேறு கோணத்தில் உங்களை காட்டுகிறேன் என்று சொன்னார். அதோடு இந்த படத்துக்கு 100 சதவீதம் அனிருத் தான் இசை அமைப்பாளர் என்று கூறினார். அவரிடத்தில் இந்த படத்தில் வில்லன் யார் என்று கேட்டேன். அப்போது ராணா நடிப்பதாக சொன்னார். பஹத் பாஸில் ஒரு பொழுதுபோக்கு கதாபாத்திரம் என்று கூறினார். ராணாவை வில்லனாக பார்த்தபோது எனக்கே பயம் வந்துவிடும். பஹத் என்னை மாதிரி ஒரு ஆக்டர். எதார்த்தமாக நடித்தார். அதேபோன்று மஞ்சுவாரியர் நடிப்பை அசுரன் படத்தில் பார்த்திருக்கிறேன்.அமிதாப்பச்சன் பற்றி இன்றைய ரசிகர்களுக்கு தெரியாது. அவரிடத்தில் இருந்து நிறைய விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். அதோடு முன்னாள் பிரதமர் ராஜிவ்-ம், அமிதாப் பச்சனும் ஒன்றாக படித்தவர்கள். ஆரம்பத்தில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அதில் நஷ்டம் அடைந்தார். அப்போது மும்பையே அவரைப்பார்த்து சிரித்தது. அதன் பிறகு டிவி நிகழ்ச்சி முதல் பல்பொடி வரை நிறைய விளம்பரங்களில் நடித்தார். கஷ்டமானபோது விற்ற வீடுகளையெல்லாம் மீண்டும் வாங்கினாரவாழ்க்கை இப்படித்தான், மேலே கீழே என நகர்ந்து கொண்டே இருக்கும். குறிப்பாக சகுனிகள் இருக்கிற இந்த சமுதாயத்தில் நல்லவனாக இருந்தால் பிழைச்சுக்க முடியாது. கொஞ்சம் சாணக்கியத்தனமும் சாமர்த்தியமும் இருக்கணும். இந்த படம் ஞானவேலுக்கு சூப்பர் ஹிட் ஆக அமைய வேண்டும்” என்று பேசி முடித்தார் ரஜினிகாந்த்.