நடிகர் சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பில், கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியுள்ள “மெய்யழகன்” வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை ’96’ பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷன் விழா கோவையில் நடந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா பேசுகையில்,”மெய்யழகன் படம் மிக அருமையாக வந்திருக்கிறது. நேற்று இரவு இந்த படத்தை பார்க்கும்போது நான் ரொம்ப நாளுக்கு அப்புறமா அப்படியே தொண்டையிலே ஒரு பெரிய கல்லை வச்சுக்கிட்டு முழுங்க முடியாம ஒரு சந்தோசமும் இருக்கும். ஒரு அழுகையும் இருக்கும் இல்லையா, அதெல்லாம் கலந்து இருந்தது. நடிக்கிறதை தாண்டி,உண்மையா ஆத்மார்த்தமா ரெண்டு பேரும் பேசிக்கிட்ட அந்த உறவு எனக்கு ரொம்ப பொறாமையா இருந்துச்சு. இந்த படத்துல நான் பருத்தி வீரனுக்கு அப்புறமாக கார்த்தியை கட்டியணைத்துக்கொண்டேன். அதேபோல் ‘ரோஜா’ பட ரிலீஸின்போது அரவிந்த் சாமியை தேவி தியேட்டரில் பார்த்தேன். அப்போது அவர் போட்டிருந்த மெரூன் கலர் டிஷர்ட்டை போலவே நானும் வாங்கி போட்டுக்கொண்டேன்.இப்ப வரைக்கும் என்னோட செல்புல ஒரு மீறும் டீ சர்ட் இருக்குன்னா டக்குன்னு அவரோட அந்த பிளாஷ் பேக் வந்துட்டு போகும்.. ஜோதிகா சொல்லிட்டே இருப்பாங்க: 96 படத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அந்தப் படம்போல் இந்தப் படமும் ஒரே இரவில் நடக்கும் கதைதான். கார்த்தியின் கதை தேர்வு குறித்து ஜோதிகா என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்.
அதே மாதிரி ஒரு படத்தை படமாக மட்டும் பாருங்கள். வணிக ரீதியாக எவ்வளவு வசூல் செய்தது, எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்ற பிரச்சனை உங்களுக்கு வேண்டாம். தயவுசெய்து அது உங்களுக்கு தேவையில்லை.இந்த படத்தை கொண்டாடுவதற்காகவே நான் தயாராக இருப்போம். படத்தை மட்டும் பாருங்கள். விமர்சனத்தில் அதிக ஆர்வம் காட்ட வேண்டாம். இந்த மாதிரியான படங்கள் அபூர்வமாகவே கிடைக்கும்.” இவ்வாறு அவர் பேசினார்