2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு, மகாராஜா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், தங்கலான், வாழை, ஜமா ஆகிய 6 தமிழ்ப் படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு,மகாராஜா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், தங்கலான், வாழை, ஜமா ஆகிய 6 தமிழ் திரைப்படங்கள் உள்பட 28 திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 10 இந்தி படங்களு்ம் , 5 மலையாளப்படங்களும் தலா 3 தெலுங்கு, மராத்திய படங்களும் ஒரு ஒரியா படமும் அடங்கும்.
சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருது ஆகும். இந்த ஆஸ்கர் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸில் இந்த விழா நடைபெறுகிறது.அதன்படி
97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் போட்டியிடுவதற்காக நாடு முழுவதும் மொத்தம் 29 திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதில் தமிழில் மட்டும் 6 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.1. மகாராஜா : இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியானது. 2. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் : ‘ஜிகர்தண்டா’படத்தைத் தொடர்ந்து வெளியான படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.3. வாழை : .4. கொட்டுக்காளி : `கூழாங்கல்’ இயக்குனர் பி.எஸ்.வினோத் இயக்கத்தில் சூரி நடித்த திரைப்படம் ‘கொட்டுக்காளி’. இப்படத்தில் அன்னா பென் கதாநாயகியாக நடித்திருந்தார். .5. தங்கலான் : பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பல பரிமாணங்களுடைய கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார் .6. ஜமா : தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவான படம் ‘ஜமா’. பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். ‘.மேலும், தெலுங்கில் ‘ஹனுமன் மற்றும் கல்கி 2898 ஏடி’ , இந்தியில் ‘அனிமல் மற்றும் லாபட்டா லேடீஸ்’ , மலையாளத்தில் ‘உள்ளொழுக்கு, ஆடுஜீவிதம் மற்றும் ஆட்டம்’ உட்பட ஒருசில குறிப்பிட்ட படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.”,