பாலிவுட்டில் ஒரு காலத்தில் பிசியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஊர்மிளா.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகி ஆனவர் மும்பையை சேர்ந்த ஊர்மிளா மடோன்கர். இவர் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தில் ருடன் நாயகிகளில் ஒருவராக நடித்தவர். இவர் பிஸியான நடிகையாக வலம் வந்த காலக்கட்டத்திலேயே . தொழில் அதிபரும், மாடலுமான காஷ்மீரை சேர்ந்த மொஹ்சின் அக்தர் மிர் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார் ஊர்மிளாவை விட 10 வயது சிறியவர் மொஹ்சின்.இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது நடிகை ஊர்மிளாவுக்கு வயது 50 . மொஹ்சினுக்கு வயது 40. இருவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில் ஊர்மிளாவும், மொஹ்சினும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில்,விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனராம். இது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களால் வெளியாகி தீயாக பரவி வருகிறது. .திருமணத்திற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்த ஊர்மிளா,மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம். மேலும் அரசியலிலும் கால் பதித்துள்ள ஊர்மிளா முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த ஊர்மிளா ,தற்போது சிவசேனா கட்சியில் இருக்கிறார். ஊர்மிளா, மொஹ்சினின் பிரிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது