நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகர் தனுஷ். இந்த தம்பதிகளுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மனமொத்த தம்பதிகளாய் வளம் வந்த இவர்கள் மீது யார் கண் பட்டதோ தெரிய வில்லை சுமூகமாக போய்க்கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் இவர்களுக்குள் ஏற்பட்ட சில பிரச்னைகள் ‘ஈகோ’வாய் உருவெடுக்க, அது அவர்களுக்குள் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்த, இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். ஆனால் இருவரையும் எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று இரண்டு குடும்பத்தினரும் முயன்று வந்தனர். தற்போது இதற்கு பலன் கிடைத்துள்ளது. இருவரும் மகன்களுக்காக மீண்டும் சேர்ந்து வாழும் முடிவை எடுத்துள்ளதாகவும், அதே சமயம் ஒருவர் விவகாரத்தில் ஒருவர் தலையிடுவதில்லை. என்றும் இல்ல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வது என்ற முடிவையும் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ராயன் படத்தை பார்த்து ஐஸ்வர்யா, தனுசுக்கு வாட்ஸ அப்பில்,காதல் எமோஜிக்களுடன் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்ததாகவும் இதை தொடர்ந்தே சமீப காலமாக ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களுக்கு தனுஷ் ‘லைக்’ செய்து வருவதாகவும். இருவரும் மீண்டும் இணைவது உறுதி என்றும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. அடுத்த ஆண்டு ரஜினியின் திரையுலக பொன் விழாவில் இருவரும் இணைந்தே ரஜினியிடம் ஆசி பெறுவது உறுதி என்கிறது கோலிவுட் வட்டாரம்