விஜய் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் புகழ் ,வலிமை, வீட்டில விஷேசம், எதற்கும் துணிந்தவன், சபாபதி, யானை, மிஸ்டர் ஜூ கீப்பர் உள்ளிட்ட பல்வேறு திரைப் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2022-ல் கோவையை சேர்ந்த பென்சியா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு கடந்த வருடம் அழகான பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு தனது மகளுக்கு ரிதன்யா என்று பெயரிட்டுள்ளார் இந்நிலையில் புகழ் தனது மகளின் முதல் பிறந்தநாளில், மனைவி, மகளுடன் இணைந்து ஸ்பெஷல் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அதில்,”முதன் முதலாக உன்னை என் கைகளில் ஏந்தியதை என்னால் மறக்கவே முடியாது. இனி வரும் காலம் முழுவதும் எங்கள் வாழ்வை கருவறையாக்கி உன்னை சுமக்கப்போகிறோம். மகளாய் வந்துள்ள மகாராணிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” என்றும் பதிவிட்டுள்ளார்