அஜித்தின் என்னை அறிந்தால் வரும் 5-ந்தேதியன்று வெளியாகிறது. இதில், அஜித், சத்யதேவ், சத்யா என இரண்டு கெட்டப்பில் வருகிறார். அதேபோல் திரிஷா ஒருடான்சராக ‘ஹேமானிகா’ என்ற பெயரில் அஜித்தின் ஜோடியாக நடித்துள்ளார். இன்னொரு நாயகியான அனுஷ்கா ஐ.டி துறையில் வேலை பார்க்கும் பெண்ணாக தேன் மொழி என்ற கதாபாத்திரத்தில் அஜித்தை ஒரு தலையாக காதலிக்கும் கேரக்டரில் வருகிறார்.நகைச்சுவை கேரக்டரை ஏற்றுள்ள விவேக், அஜித்தின் நண்பராக ‘ ரிவால்வர் ரிச்சர்டு’ என்ற வேடத்தில் முதல் பாதி முழுவதும் சிரிப்பு மூட்டுவாராம். விக்டர் என்ற கேரக்டரில் அருண் விஜய் வில்லனாக கலக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இப்படதையடுத்து அருண் விஜய்க்கு வில்லன் வேடங்கள் வரிசை கட்டி வரும் என்கிறார்கள். தன் மகன்(அஜித்) ஒரு மருத்துவராக வரவேண்டும் என்று ஆசைப்படும் தாய், ஆனால்,அவன் என்ன ஆகிறான், அவன் வாழ்க்கையில் யாரையெல்லாம் சந்திக்கிறான்,எப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர் நோக்குகிறான் என ,25 வயது முதல் 40 வயது வரையிலான ஒரு இளைஞனின் கதை தான் ‘என்னை அறிந்தால்’ என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.